நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும் திமுக சார்ப்பில் திருச்சியில் இன்று மாலை பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் உச்ச நீதிமன்றம் தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்த்து போராட்டம் நடத்த தடை விதித்தது. இதனால் பொதுக்கூட்டத்தை நடத்துவது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.