செங்கோல் விவகாரம்: திருவாடுதுறை ஆதீனம் அறிக்கை

Webdunia
வெள்ளி, 26 மே 2023 (15:31 IST)
மத்தியில் பிரதமர் மோடி  தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், ''புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சோழர் காலத்து செங்கோல் நிறுவப்பட உள்ளதாக''வும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார். ''இந்த செங்கோல் நாடு சுதந்திரம் அடைந்தபோது முன்னாள் பிரதமர் நேருவுக்கு திருவாடுதுறை ஆதினம் வழங்கிய செங்கோல் எனவும், இது  நாடாளுமன்ற மக்களவையின் சபா நாயகர் இருக்கை முன் நிறுவப்பட உள்ளதாகவும்' அமித்ஷா கூறியிருந்தார்.

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கருத்துமோதல்கள் எழுந்துள்ள நிலையில், செங்கோல் விவகாரத்தில், காங்கிரஸ் ஏன் இந்திய பண்பாட்டை புறக்கணிக்கிறது; பழமையான திருவாடுதுறை ஆதினத்தை காங்கிரஸ் அவமதித்து, ஆதினத்தின் வரலாற்றை  போலி என்று காங்கிரஸ் கூறியுள்ளது அக்கட்சியின் நடத்தையைக் காட்டுகிறது என்று  அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்தர். இந்த நிலையில், திருவாவடுதுறை ஆதீனம் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில்,  குறிப்பிட்டதொரு அரசியல் கட்சியைச் சேர்ந்த சிலர் சொன்னதாகச் சில அறிக்கைகளைக் கண்டோம். 1947-ல், ஆட்சி மாற்றத்தை அடையாளப்படுத்தும் வகையில் செங்கோல் வழங்கப்பெற்றது குறித்த வரலாற்றைப் பொய் என்று இந்தக் குறிப்பிட்ட அரசியல் கட்சி கூறியதாகத் தெரியவருகிறது.

ஆட்சி மாற்றத்தின்போது, அதனை அடையாளப்படுத்துகிற சடங்கினைச் செய்விக்க அழைக்கப் பெற்றோம் என்பது நம்முடைய ஆதீனத்தின் பதிவுகள் உட்பட, பலவகையான ஆதாரங்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜாஜி அவர்களின் அழைப்பை ஏற்றுக்கொண்ட நம்முடைய ஆதீனகர்த்தர், தக்க செங்கோல் செய்வித்து, முறையான சடங்குகளில், மவுண்டபேட்டன் பிரபுவிடம் அதைக் கொடுத்து வாங்கி, தொடர்ந்து செங்கோலைப் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களிடம் கொடுக்கச் செய்தார்கள் .

பண்டித நேருவிடம் செங்கோலை வழங்கிய தம்பிரான் சுவாமிகள், செங்கோல் என்பது சுய ஆட்சியின் சின்னம் என்பதையும் தெளிவாகத் தெரிவித்தார்கள். அரசியலுக்காக, அரசியல் ஆதாயங்களுக்காக. இந்தச் சடங்குகளும் நிகழ்வுகளும் பொய் அல்லது போலி என்று கூறுதல், எமது நம்பிக்கைத் தன்மையின்மீது ஐயம் எழுப்புதல், ஆட்சி மாற்றத்தின் அடையாளம் செங்கோல் என்பதன் முக்கியத்துவத்தைக் குறைக்க முயல்தல் ஆகியவை மிகுந்த வருத்தத்திற்குரியவை, தவிர்க்கப்படவேண்டியவை.

துறைசை ஆதின இது குறித்த விரிவான தகவல்களை இன்று மாலை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் முழுவதும் தெரிவிக்கின்றோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்