ஆடி பிரதோஷம் , பவுர்ணமி.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி உண்டா? முக்கிய அறிவிப்பு..!

Mahendran
புதன், 17 ஜூலை 2024 (11:59 IST)
ஆடி மாதம் பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் தினங்களில் பக்தர்கள் ஏராளமானோர் வருவது உண்டு.

அந்த வகையில் ஆடி மாதம் பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு ஜூலை 19ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நான்கு நாட்கள் பக்தர்கள் மலையேற வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

பக்தர்கள் இரவில் கோவிலில் தங்குவதற்கு அனுமதி கிடையாது என்றும் எளிதில் கைப்பற்ற கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என்றும் வனத்துறையினர் நிபந்தனை விதித்துள்ளனர்.

மேலும் சிறப்பு பூஜைக்கான முன்னேற்பாடுகள்  செய்வதற்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்