என் பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டாம்… சசிகலா வேண்டுகோள்!

Webdunia
செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (10:40 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா சிறை விடுதலைக்குப் பிறகு இப்போது தமிழ்நாட்டில் இருக்கிறார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிறையிலிருந்து விடுதலையானது முதலாக பல அதிமுகவினர் அவருக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டி வருவதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். அவரும் அடிக்கடி ஆடியோ வெளியிட்டு கட்சியைக் கைப்பற்ற முயன்று வருகிறார்.

இந்நிலையில் சசிகலாவின் பிறந்தநாள் நாளை வரும் நிலையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘கொரோனா காரணமாக யாரும் என்னை சந்திக்க வரவேண்டாம். தொண்டர்கள் அவர்கள் வசிக்கும் இடங்களிலேயே நலத்திட்ட உதவிகள் வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்