சசிகலா குடும்பத்தினர் எங்கே உழைத்தார்கள்; எல்லாம் ஜெயலலிதாவை அண்டி பிழைத்த பணம்!

Webdunia
சனி, 30 செப்டம்பர் 2017 (16:06 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா இருந்த போதும் சரி அவர் மறைந்த போதும் சரி அவரது தோழி சசிகலா கடுமையாக விமர்சிக்கப்படுகிறார். ஜெயலலிதாவை பயன்படுத்தி சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தார்கள் என்ற குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பொதுவாக உண்டு.


 
 
தமிழக முதல்வர் ஜெயலலிதா இறந்த பின்னர் அதிமுக தொண்டர்கள் செய்வதறியாமல் இருந்தனர். ஆனால் அனைவரும் சசிகலாவுக்கு எதிரான மனப்பான்மையில் இருந்தார்கள். ஆனால் ஒட்டு மொத்த எம்பி, எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் என அனைவரும் சசிகலாவிடம் சரணாகதியாகியிருந்தார்கள். இவை அனைத்திற்கும் காரணம் சசிகலாவின் பண பலம் என்றே அரசியல் வட்டாரத்தில் கூறுகிறார்கள்.
 
இந்நிலையில் கோடிக்கணக்கில் பணம் வைத்திருக்கும் சசிகலா குடும்பத்தினர் எங்கே போய் உழைத்தார்கள் என நமது எம்ஜிஆர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ் தனியார் தொலைக்காட்சியின் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
 
இது தொடர்பாக கூறிய மருத்து அழகுராஜ், சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் ஜெயலலிதாவை பயன்படுத்தி தவறான வழியில் சம்பாதித்தார்கள். ஜெயலலிதாவுடன் 33 ஆண்டுகள் பயணித்த சசிகலா அதற்காக பெற்றுக்கொண்ட விலை, மிக அதிகம்.
 
சசிகலா, தினகரன் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கோடி கோடியாக சொத்து இருக்கிறது. இந்த சொத்துக்கள் அனைத்தையும் உழைத்தா சம்பாதித்தார்கள்? ஜெயலலிதாவை அண்டி இருந்து அவரது பதவியை பயன்படுத்தி சசிகலா குடும்பத்தினர் சம்பாதித்தனர். ஆனால் அவப்பெயரை சம்பாதித்தது ஜெயலலிதா. இது எல்லாவற்றுக்கும் காரணம் சசிகலாவும் அவரது குடும்பமும் தான் என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்