சமாதியில் குற்றவாளியாக ஜெயலலிதா: நமது எம்ஜிஆர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் பரபரப்பு பேட்டி!

Webdunia
சனி, 30 செப்டம்பர் 2017 (15:35 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த வருடம் டிசம்பர் 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு பின்புறம் அடக்கம் செய்யப்பட்டது.

 

ஜெயலலிதா மரணமடைந்த சில மாதங்களில் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்தது. அதில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நான்கு பேரும் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது. அதில் ஜெயலலிதா இறந்துவிட்டதால் அவருக்கான தண்டனை அறிவிக்கப்படவில்லை.
 
இந்நிலையில் பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த நமது எம்ஜிஆர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ் ஜெயலலிதா சமாதியில் குற்றவாளியாக இருக்கிறார் எனவும் இதற்கு காரணம் சசிகலா எனவும் விமர்சித்துள்ளார்.
 
இது தொடர்பாக அவர் பேசியபோது, ஓடி ஓடி 130 படங்களில் நடித்து உழைத்து சம்பாதித்து உயர்நிலையை அடைந்த ஜெயலலிதா, இறுதியாக தற்போது சமாதியில் குற்றவாளியாக இருப்பதற்கு சசிகலாவும் அவரது குடும்பமும்தான் காரணம்.
 
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைக்கு செல்ல சசிகலாவும் அவரது குடும்பமும் தான் காரணம். ஜெயலலிதாவுக்கு ஊழல் செய்து சம்பாதிக்க வேண்டிய அவசியம் கிடையாது. சசிகலாவும் அவரது குடும்பமும் ஜெயலலிதாவை பயன்படுத்தி தவறான வழியில் சம்பாதித்துவிட்டார்கள் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்