தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்களை ஓபிஎஸ் அணியினர் உட்பட பல அரசியல் கட்சியினர் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் ஜெயலலிதா சிகிச்சை எடுத்த புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிடவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் விமர்சிப்பவர்கள் சசிகலா குடும்பம் தான் ஜெயலலிதாவை கொன்றார்கள் என கடுமையாக சாடி வந்தனர். இதனால் சசிகலா குடும்பத்தின் மீது ஒரு எதிர்மறையான கருத்தே நிலவி வந்தது. இதனை ஓபிஎஸ் அணியினரும் தங்களுக்கு சாதகமாக எடுத்து பேசி வந்தனர்.
இந்த சூழலில் தான் சசிகலாவின் தம்பி திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவந்த வீடியோ தங்களிடம் இருப்பதாகவும், அதை எப்பொழுது வேண்டுமானாலும் வெளியிடுவோம் என கூறியிருந்தார்.
இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு நிலவியது. இதனை தொடர்ந்து கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தியும் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது எடுத்த வீடியோ இருப்பதாகவும் அதனை எந்த நேரத்திலும் வெளியிடுவோம் என கூறி அதிரடியை கூட்டினர்.
இந்நிலையில் அந்த வீடியோவில் என்ன இருக்கிறது என்ற தகவல்கள் பரவி வருகிறது. அதில், ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும் போது சசிகலாவை கடுமையாக வசைபாடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
மேலும் ஜெயலலிதாவின் அரசியல் எதிரியையும், அவரது குடும்பத்தையும் கேவலமாக பேசும் காட்சிகள் உள்ளதாகவும், இந்த வீடியோ வெளியிட முடியாத நிலையில் உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. அரசியல் ரீதியாக ஜெயலலிதாவின் புகழுக்கு இந்த வீடியோ ஆப்பு வைத்துவிடும் என அஞ்சப்படுகிறது.
அப்பல்லோ நர்ஸ் ஒருவர் மூலம் இந்த வீடியோ ரகசியமாக எடுக்கப்பட்டதாகவும் இதனை சசிகலா குடும்பத்தினர் பாதுகாப்பாக வைத்துள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. வீடியோ எடுத்த நர்ஸும் இதனை வெளியில் சொல்லாமல் ரக்சியமாக காத்து வருகிறார். ஆனால் இந்த வீடியோ எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வெளிவரலாம் என கூறப்படுகிறது.