ஜெயலலிதாவுக்கு பயந்து அமெரிக்கா சென்ற ரஜினி: சரத்குமார் சரமாரி குற்றச்சாட்டு!

Webdunia
புதன், 31 ஜனவரி 2018 (16:32 IST)
அரசியலில் புதிதாக களமிறங்கியுள்ள நடிகர் ரஜினியை, நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் சரமாரியாக விமர்சித்துள்ளார்.
 
தமிழக அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து நடிகர் சரத்குமார் தலைமையில் சமத்துவ மக்கள் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் கலந்துகொண்டு பேசிய அவர் நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார்.
 
நானும் ஆன்மீகவாதிதான், ஆனால் நான் ரஜினி காட்டுவது போல பாபா முத்திரையைக் காட்ட மாட்டேன். அது ஆட்டுத் தலை போல உள்ளது. இதுகுறித்து ஏற்கனவே சீமான் கூறியுள்ளார். அது பாபாவின் முத்திரையல்ல, சீக்ரெட் சமூகத்தில் முத்திரை என தெரிவித்தார்.
 
மேலும் தமிழகத்தை ஆண்டவனாலேயே காப்பாற்ற முடியாது என்று கூறிவிட்டு அமெரிக்காவுக்கு சென்றவர் ரஜினிகாந்த். அன்று ஜெயலலிதா ஆட்சி அமைந்திருந்தால் உங்களை ஏதாவது செய்திருப்பார் என்று அமெரிக்காவுக்கு சென்றுவிட்டீர்கள்.
 
கலைஞர் ஆட்சி வந்த பிறகு வருகிறீர்கள். கலைஞர் அருகில் அன்று நான் அமர்ந்திருந்தேன். எனவே சந்தர்ப்பவாத அரசியல் செய்து மக்களை ஏமாற்ற வேண்டாம். காவிரி விவகாரத்தில் ரஜினியின் நிலைப்பாடு என்றும் சரத்குமார் கேள்வி எழுப்பினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்