இது ஒன்றும் சட்டமன்றம் இல்லை … கலை நிகழ்ச்சி – எஸ்.ஏ.சிக்குப் பதிலளித்த சரத்குமார் !

Webdunia
திங்கள், 18 நவம்பர் 2019 (12:55 IST)
நேற்று சென்னையில் நடைபெற்ற கமல் 60 பாராட்டு விழாவில் நடிகர் சரத்குமார் எஸ் ஏ சி அவர்களின் கருத்துக்கு காட்டமாகப் பதிலளித்துள்ளார்.

கமல் திரையுலகில் அடியெடுத்து வைத்து 60 ஆண்டுகள் ஆனதை அடுத்து அவருக்கு திரையுலகினர் சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமான பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஒருங்கிணைத்தார். இந்த விழாவில் இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர், நடிகர் சரத்குமார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்ட முன்னணிப் பிரமுகர்கள் கலந்துகொண்டு பேசினர்.

அப்போது இயக்குனர் எஸ் ஏ சி பேசுகையில் ‘அவர் ரஜினி மற்றும் கமல் தனித்தனியாக அரசியலுக்கு வருவதற்குப் பதிலாக  இணைந்து அரசியலில் ஈடுபட வேண்டும். அவர்களுக்குப் பின்னர் தங்கள் தம்பிகளுக்கு வழிவிடவேண்டும்’ எனத் தனது விருப்பத்தைப் பகிர்ந்துகொண்டார். அதன் பின்னர் பேசிய நடிகர் சரத்குமார் ‘ எஸ்.ஏ.சி பேசியதற்கு சட்டமன்றமாக இருந்தால் நான் தக்க பதிலளித்திருப்பேன். இது கலை நிகழ்ச்சி மேடை. அதனால் இந்த மேடையை அதற்காக பயன்படுத்த வேண்டிய அவசியம் எனக்கில்லை. நான் இங்கு கலைஞனாக வந்திருக்கிறேன்‘ எனப் பேசினார்.

நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியை அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்