போலீஸ் பாதுகாப்புடன் உலா வரும் எஸ்.வி.சேகர் - வைரல் புகைப்படம்

Webdunia
புதன், 13 ஜூன் 2018 (16:49 IST)
உயர் மற்றும் உச்ச நீதிமன்றம் முன் ஜாமீன் கொடுக்க மறுத்தும் கைது செய்யப்படாத நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் தமிழக காவல்துறை அதிகாரிகளுடன் காரில் சென்று வரும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

 
பெண் பத்திரிக்கையாளர்களை கொச்சைப்படுத்தும் வகையில் முகநூலில் பதிவு வெளியிட்ட விவகாரத்தில், எஸ்.வி.சேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவரை தமிழக போலீசார் இதுவரை கைது செய்யவில்லை.  சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் இரண்டும் அவருக்கு முன் ஜாமீன் வழங்காத நிலையிலும், அவர் 50 நாளுக்கு மேல் தலைமறைவாகவே இருக்கிறார். 
 
ஆனால், போலீசாருடன் அவர் பாதுகாப்பாக காரில் செல்லும் புகைப்படங்களும், அவரின் குடும்ப விழாக்களில் கலந்து கொண்ட புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த விவகாரத்தை ஏற்கனவே நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கிண்டலடித்து வருகின்றனர். 

 
இந்நிலையில், காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்புடன் சென்னை புறநகரில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு எஸ்.வி.சேகர் வந்து செல்லும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 
 
இதை வைத்தும் நெட்டிசன்கள் தமிழக அரசையும், காவல் துறையையும் கிண்டலடித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்