ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த இரண்டே முக்கால் கிலோ தங்கம் 15 லட்சம் ரொக்கம் என 2 கோடியே 4 லட்சம் பறிமுதல்!

J.Durai
வியாழன், 11 ஜூலை 2024 (16:53 IST)
சென்னையில் இருந்து திருச்சிக்கு இன்று காலை மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த பயணிகளை ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் சோதனை செய்தனர் அப்பொழுது சந்தேகத்திற்கிடமான வகைகள் இருந்த லட்சுமணன் என்கிற பயணியின் உடமைகளை சோதனை செய்த போது அவரிடம் உரிய ஆவணங்களிலின்றி கொண்டுவரப்பட்ட நகைகள் மற்றும் ரொக்கம் இருந்துள்ளது.
 
அதனை பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் இது குறித்து வணிகவரித்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
 
அதன்படி வணிகவரித் துறை அதிகாரிகள் நகைகள் மற்றும் ரொக்கம் எவ்வளவு என்பதை கணக்கிட்டனர். அதில் 15 லட்சம் ரூபாய் பணம் இருந்துள்ளது. தங்க நகைகளை கணக்கிடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். 
 
அவர்கள் கணக்கீட்டின்படி நகைகள் இரண்டே முக்கால் கிலோ இருந்துள்ளது அதன் மதிப்பு ஒரு கோடியே 89 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
லட்சுமணனிடமிருந்து மொத்தமாக நகை மற்றும் பணம் 2 கோடியே 4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 
லட்சுமணன் பரமக்குடியை மேலத்தெருவை சேர்ந்தவர் என்பதும் மதுரையில் உள்ள ஒரு நகை கடையில் பணியாற்றி வருகிறார் என்பதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது
 
லட்சுமணன் என்பவர் யார்? அவர் எங்கிருந்த நகைகளை கொண்டு வந்தார் யாரிடம் கொடுக்க எடுத்துச் சென்றார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்