ரூ. 10 லட்சம் இழப்பீடு...ஸ்டாலின் அறிவிப்பு ...

Webdunia
புதன், 26 மே 2021 (15:33 IST)
கொரோனாவால் உயிரிழந்த பத்திரிக்கையாளர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள பிரபல செய்திச் சேனலான நியுஸ் 18 தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த குருராஜேந்த்ரைன் என்பவர் இன்று கொரொனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 24 ஆம் தேதி சன் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் கணேசன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.  இதேபோல் சில பத்திரிக்கையாளர்களும் உயிரிழந்தனர்.

ஏற்கனவே தமிழக முதல்வராகப் பதவியேற்றபோது முக ஸ்டாலின் ஊடகவியலாளர்கள் முன்களப் பணியாளர்களாக அறிவித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் இன்று முதல்வர் முக.ஸ்டாலின் கொரொனாவால் உயிரிழந்த பத்திரிக்கையாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட  பத்திரிக்கையாளர்கள், ஊடகவியலாளர்களுக்கான சிறப்பு ஊக்கத்தொகை ரூ. 3000 லிருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பத்திரிக்கையாளர்கள் ,ஊடகவியலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்