சிவகங்கை மாவட்டம் மதகுபட்டியில் அனுமதியின்றி கோவில் திருவிழா நடத்தியதால் பொதுமக்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
மதகுபட்டியில் அனுமதியின்று கோவில் திருவிழா நடத்தியதால் அதனை தடுக்க காவல் துறையினர் அங்கு விரைந்துள்ளனர். இதனால் பொதுமக்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து விசாரணை நடத்த காவல் துறையினர் கிராம மக்கள் சிலரை காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதில் காவல் துறைனருக்கும் கிராம மக்களுக்கும் இடையே கலவரம் மூண்டது. கிராம மக்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதில் 8 காவலர்கள் காயம் அடைந்தனர்.
இதனையடுத்து காவல் துறையினர் கண்ணீர் புகைக்குண்டு வீசி கூட்டத்தினரை விரட்டியடித்தனர். இந்த தாக்குதல் குறித்து காவல் துறையினர் கிராம மக்கள் பலர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் வீடு புகுந்து பலரை கைது செய்துள்ளனர்.
வீடு புகுந்து கைது செய்த காவல் துறையினர் வீட்டிலிருந்த பொருட்களை அடித்து நொருக்கியதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் அந்த கிராமத்தில் மிகவும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.