அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக காய் நகர்த்தி வருவதாகவும், அவர் சசிகலா, ஓ.பி.எஸ்., மற்றும் டி.டி.வி. தினகரனுடன் இணைந்து அதிமுகவை கைப்பற்ற திட்டமிடப் போவதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், அதிமுகவிலிருந்து பல தலைவர்கள் வெளியேறினர். குறிப்பாக, சசிகலா, டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ். ஆகியோர்கள் தனித்தனி அணியாக தற்போது அரசியலில் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அதிமுகவில் தனக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிருப்தியில் இருப்பதால், அவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக காய் நகர்த்தி இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு கோகுலா இந்திரா உள்பட சில சீனியர் தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.
எனவே, அதிமுகவிலிருந்து பிரிந்த சசிகலா, டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ். ஆகியோர்களுடன் இணைந்து செங்கோட்டையன் அதிமுகவை கைப்பற்ற திட்டமிடுவதாகவும், இரட்டை இலை சின்னத்தை முடக்க ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுவது, அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.