தமிழகத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள்!- காவல்துறை அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 28 டிசம்பர் 2021 (23:07 IST)
தமிழகத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரொனா சில மாதங்களாகக் கட்டுக்குள் உள்ள நிலையில் தற்போது ஒமிக்ரான் தொற்று பரவி வருகிறது. இதைத் தடுக்க தமிழக அரசு மத்திய அரசுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதித்து தமிழக காவல்துறை  உத்தரவிட்டுள்ளது.

அதில், பண்ணை வீடுகள்ச், ரிசாடுகள், கிளப்புகள், மாநாடு அரங்குகள் உள்ளிட்டவற்றில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

மேலும்,  சென்னையிலுள்ள மெரீனா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் வீல நீலாங்கரை கடற்கரைகளுக்கும் மக்கள் செல்ல வேண்டாம் என உத்தரவிட்டுள்ளது காவல்துறை

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்