பேங்க் அக்கவுண்ட்டில் நிவாரண நிதி செலுத்தப்படும்: முதலமைச்சர்

Webdunia
திங்கள், 26 நவம்பர் 2018 (10:44 IST)
கஜா புயலால் பாதிக்கப்பட்டோரின் வங்கிக் கணக்கில் நிவாரன நிதி செலுத்தப்படும் என புதுவை முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
 
கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் சீரழிந்து போயுள்ளன. அந்த மாவட்ட விவசாயிகள் கிட்டதட்ட 10 வருடங்கள் பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளனர். தங்கள் வாழ்வாதாரங்களான தென்னை, பனை, வாழை, சவுக்கு, மா, பலா மரங்களை பறிகொடுத்து வாழ வழியின்றி நிற்கதியாய் தவிக்கின்றனர். மீளா துயரத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு போதிய நிவாரணம் வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
 


























இந்த கஜா புயலால் காரைக்காலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய புதுவை முதலமைச்சர் நாராயணசாமி, . மீனவர்களுக்கு ரூ.2500 நிவாரண நிதியாக வழங்கப்படும். விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம், முழுமையாக பாதிக்கப்பட்ட 1,500 குடிசைகளுக்கு தலா ரூ.4,500 வழங்கப்படும். இந்த நிவாரண தொகை பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்