சென்னை போரூரை அடுத்த பகுதியில் வசித்து வந்தவர் ஜெகதீசன். இவர் சில தினங்களுக்கு முன், தனது வீட்டை பூட்டி விட்டி வெளியே சென்றுள்ளார். மீண்டு இரவில் வந்து பார்த்தபோது, வீட்டில் வைத்திருந்த 5 சவரன் நகை மற்றும் பணம் திருடுபோனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அதில், ஒரு ஆணும், பெண்ணும், தங்களின் உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று கதவைக் கள்ளச் சாவு போட்டு திறந்து கொள்ளயடித்துச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து அவர்களிடம் போலீஸார் விசாரித்தபோது, உறவினர்களில் வசதியானவர்களின் வீடுகளுக்குச் சென்று, அவர்கள் சாவி வைக்கும் இடத்தை அறிந்து, அதைச் சோப்பில் பதிந்து, கள்ளச் சாவி போட்டு, திருட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.