சென்னை மயிலாப்பூரில் உள்ள பிரபல பூர்விகா கடையில், பல ஆயிரம் மதிப்புள்ள செல்போன்களை பெற மோசடியாகக் கடன் ஒப்புதல் அளித்து, ரூ. 17 லட்சம் அளவுக்கு மோசடி செய்த ஊழியரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்தக் கடன் ஒப்புதல் வழங்க நிதி நிறுவனத்தில் சார்பில் நியமிக்கப்பட்ட ஊழியர் சாந்தகுமார் என்பவர், கடந்த ஆகஸ்ட் முதல் பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் தனது உறவினர்கள், நண்பர்களை வரவழைத்து 33 விலை உயர்ந்த செல்போன்களுக்கு கடன் வழங்கியுள்ளனர்.அதன்பின்னர், கடன்பெற வழங்கப்பட்ட ஆவணங்கள் போலி என கூறி கடனை ரத்து செய்து மோசடி செய்துள்ளதாகத் தெரிகிறது. அதற்காக வாடிக்கையாளர்களிடம் பணம் பெற்றுள்ளனர்.
அதன்பின்னர் பணியில் சேர்ந்த நவீன் பிரியன் மற்றும் பிரகாஷ் ஆகியோரும், தொடர்ந்து மோசடி செய்துள்ளனர். இந்த வகையில் பூர்விகாவுக்கு சுமார் 17 லட்சம் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.இந்தக் பணத்தை ஹோம் கிரிடிட் நிறுவனம் வழங்கிவிட்ட வந்த நிலையில், பூர்விகாவுக்கு நஷ்டம் ஏற்படுத்த நினைத்த மோசடி ஊழியர்களின் மீது அந்நிறுவனம் அளித்த புகாரின் பேரில், போலீஸார் சாந்தகுமாரை கைது விசாரித்து வருகின்றனர்.மேலும் சிலரை தேடி வருகின்றனர்.