நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தென் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!

Mahendran
வியாழன், 21 நவம்பர் 2024 (10:44 IST)
வங்கக்கடலில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதை அடுத்து தென் மாவட்டங்களுக்கு அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
வங்கக்கடலில் நாளை மறுநாள், அதாவது நவம்பர் 23ஆம் தேதி, காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நவம்பர் 25ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாகவும், நவம்பர் 26ஆம் தேதி முதல் தமிழகத்தில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
 
இந்த நிலையில், தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு அதிக கன மழை பெய்யும் என்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்களிலும், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அடுத்த 24 மணி நேரத்தில், சென்னையில் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்