சசிகலா முதல் உரையின் பின்னணி யார்? கார்டனில் கசிந்த தகவல்!

Webdunia
ஞாயிறு, 1 ஜனவரி 2017 (08:49 IST)
அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்று தன்னுடைய முதல் உரையை சசிகலா ஆற்றினார். அப்போது தான் அவரின் குரலையே பொதுமக்கள் கேட்டனர்.


 
 
சசிகலா ஆற்றிய உரையை எல்லோரும் ஆச்சர்யத்துடன் பார்க்கும் நிலையில், இதற்கு முழுக்காரணம் நடராஜன் தான் என்று கார்டன் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
 
அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்றுக்கொண்ட சசிகலா அனைவருக்கும் நன்றி தெரிவித்து உரையை தொடங்கினார். ஜெயலலிதாவின் நட்பு, உடல்நிலை குறித்து உருக்கமாக பேசி உரையை முடித்தார். 
 
அவரின் முதல் பேச்சு அனைவராலும் ஆச்சர்யமாக பார்க்கப்படும் நிலையில் உரையை, நடராசன் தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழுதான் தயாரித்துள்ளது. 
 
மேலும், கார்டனில் சிறிய அறையில் மைக் வைத்து சசிகலா பேசிப்பார்த்துள்ளார். பேச்சில் உள்ள ஏற்ற இறக்கங்களை சசிகலாவின் அக்கா மகன் தினகரன் தான் சொல்லிக்கொடுத்துள்ளார்.
 
எப்போதும் சாதாரண உடை அணியும் சசிகலா பதவி வரப்போகிறது என்றதும் உடை, வாட்ச் அனைத்தையும் பார்த்து பார்த்து தெரிவு செய்திருக்கிறார். அவற்றை தினகரனின் மனைவி பார்த்துக்கொண்டாராம். 
அடுத்த கட்டுரையில்