அழகிரியை விமான நிலையத்தில் வரவேற்ற திமுக நிர்வாகி சஸ்பெண்ட்

Webdunia
செவ்வாய், 4 செப்டம்பர் 2018 (08:05 IST)
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின்னர் அவரது மகன் மு.க.அழகிரி மீண்டும் திமுகவில் சேர்த்து கொள்ளப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதுகுறித்து திமுகவின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டான் தொடர்ந்து மெளனம் காத்து வருகின்றார்.

ஸ்டாலினின் தலைமையை ஏற்றுக்கொள்வதாக அழகிரி கூறியும், அவரை திமுகவில் சேர்க்க திமுக தலைவர் தயக்கம் காட்டி வருவதால் இனிமேல் அழகிரி திமுகவில் இணைய வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனது பலத்தை நிரூபிக்க நாளை சென்னையில் அமைதிப்பேரணி ஒன்றை நடத்த மு.க.அழகிரி திட்டமிட்டுள்ளார். இந்த பேரணியில் திமுகவின் உண்மையான தொண்டர்கள், கருணாநிதியின் விசுவாசிகள் சுமார் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று அழகிரி ஏற்கனவே கூறியுள்ளார்.

இந்த நிலையில் நாளைய அமைதிப்பேரணியில் பங்கேற்க சென்னை வந்த அழகிரியை விமான நிலையத்தில்  திமுக நிர்வாகி ரவி வரவேற்றார். இதனையடுத்து ரவி கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக  திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். ரவி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் அவரை தற்காலிகமாக நீக்குவதாகவாக அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்