’ராம்குமார் யோக்யனா என்று தெரியாது; ஆனால் செத்திருக்கக் கூடாது’ - ருத்ரன் வேதனை

Webdunia
செவ்வாய், 20 செப்டம்பர் 2016 (02:18 IST)
ராம்குமார் செத்திருக்கக் கூடாது. உண்மையும் அதற்கான தண்டனையும் இனி என்றும் வராது என்பதே அநியாயம் என்று பிரபல மனநல மருத்துவர் ருத்ரன் வேதனை தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்த அவரது முகநூல் பதிவு கீழே:
 
முன்பு கழுத்தறுபட்டு பேச முடியாமல் போனதாய்ச் சொல்லப்பட்டது நிஜமெனில், அவனிடம் தற்கொலை எண்ணம் இருந்தது என கொள்ளலாம் - அது நிஜமெனில்.
 
அப்படி தற்கொலை எண்ணமுள்ள ஒருவனை தீவிரமாய் கண்காணித்திருக்க வேண்டும். அவனை தனியே கடிக்கக்கூடியபடி கைக்கும் வாய்க்கும் எட்டும் மின்கம்பிக்கருகே விட்டதும் ஒரு குற்றம்தான்.
 
aiding and abetting suicide (if it is suicide).
 
பிரேத பரிசோதனையில் இந்த மின்கம்பி கடித்த கதை பற்றி என்ன தெரிய வந்து விடும்?
 
stupid script, bad direction but the film is completed and released.
 
அவன் யோக்யனா என்று எனக்குத் தெரியாதுதான், அவன் செத்திருக்கக் கூடாது. உண்மையும் அதற்கான தண்டனையும் இனி என்றும் வராது என்பதே அநியாயம்.
அடுத்த கட்டுரையில்