கடந்த சில மாதங்களாகவே நாட்டின் பல பகுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது என்பதும், கிட்டத்தட்ட அனைத்துமே போலி வெடிகுண்டு மிரட்டல் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
இதனை அடுத்து காவல்துறை மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மும்பை இந்திய ரிசர்வ் வங்கியை சோதனை செய்ததில் எந்த விதமான வெடிகுண்டு பொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனை அடுத்து, இது ஒரு போலி மிரட்டல் என்பது தெரிய வந்துள்ளது.
மேலும், மிரட்டல் விடுத்த நபர் ஒரு பாடல் பாடியதாகவும், மிரட்டல் விடுத்த நபர் வாடிக்கையாளர் சேவை எண்ணின் மூலம் தொடர்பு கொண்டு தன்னை ஒரு பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் என்று அறிமுகப்படுத்தியதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.