சுவாதி கொலை வழக்கில் ஜாமின் கோரி ராம்குமார் நீதிமன்றத்தில் மனு

Webdunia
செவ்வாய், 5 ஜூலை 2016 (12:20 IST)
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தி கடந்த மாதம் 24-ஆம் தேதி இளம்பெண் சுவாதி ராம்குமார் என்ற நபரால் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.


 

சுவாதியை கொலை செய்ய ராம்குமார் பயன்படுத்திய அரிவாளும், ரத்தம் படிந்திருந்த சட்டையும் மரபணு பரிசோதனைக்காக ஐதராபாத்தில் உள்ள சோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சுவாதி கொலையை நேரில் பார்த்தவர்கள், ராம்குமாரை நேரில் பார்த்தவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. ராம்குமார் தங்கியிருந்த மேன்சனில் உள்ள சிலரும் சாட்சிகள் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளனர்.  ஆதாரங்கள் நிரூபணமானால் தான்  ராம்குமாருக்கு விரைவில் அதிகபட்ச தண்டனை வாங்கிக் கொடுக்க முடியும். தற்போது சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகச்சை எடுத்து வரும் ராம்குமாரின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்திருக்கிறது.

இந்நிலையில் தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ராம்குமார் மனு தாக்கல் செய்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்