நிறம் மாறிய கடல்நீர்; வீசிய துர்நாற்றம்! – அதிர்ச்சியில் மக்கள்!

Webdunia
புதன், 6 மே 2020 (14:53 IST)
ராமநாதபுரம் கடல்பகுதியில் கடல் நிறம் மாறியுள்ளதாலும் துர்நாற்றம் வீசுவதாலும் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்கள் பலர் அன்றாட பணிகளை இழந்து வீடுகளில் முடங்கியுள்ளனர். ராமநாதபுரத்தில் மீனவர்கள் பலர் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக மண்டபம் பகுதி கடல்பகுதியில் கடல்நீரின் நிறம் பச்சையாக மாறியுள்ளது. மேலும் அந்த பகுதியிலிருந்து பல இடங்களில் துர்நாற்றம் வீசுவதால் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் கடல்நீரை பரிசோதித்து வருகின்றனர். இதுகுறித்து ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். கடலில் பூங்கோறை என்ற பாசியின் விதைகள் அதிகளவில் படர்ந்துள்ளதாகவும், கடலுக்கு அடியில் வளர்ந்துள்ள இந்த பாசிகள் கடல் நீரோட்டம் மற்றும் காற்றின் வேகம் இல்லாத காரணத்தால் இவ்வாறு கரைகளில் தேங்கி துர்நாற்றத்தை ஏற்படுத்துவதாகவும், காற்று வீசும் காலம் தொடங்கியது அவை அழிந்துவிடும் என அவர் விளக்கமளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்