ஆகஸ்டு 15ம் தேதி புதிய கட்சி துவங்கும் ரஜினிகாந்த்?

Webdunia
புதன், 24 மே 2017 (14:11 IST)
நடிகர் ரஜினிகாந்த், வருகிற ஆகஸ்டு 15ம் தேதி சுதந்திர தினத்தன்று புதிய கட்சியை தொடங்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.


 

 
சமீபத்தில் தனது ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் பற்றி பேசினார். அவரின் பேச்சு விரைவில் அவர் அரசியலுக்கு வருவார் என்பதையே காட்டியது. அவர் அரசியலுக்கு வருவதை சில தலைவர்கள் ஆதரித்தும், சிலர் எதிர்த்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 
இந்நிலையில், தன்னுடைய அரசியல் பிரவேசம் பற்றி,  தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள், தனக்கு நெருக்கமான பத்திரிக்கையாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோரிடம் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களாக தீவிரமாக விவாதித்து வருவதாக தெரிகிறது.
 
இதையடுத்து அவர் தன்னுடைய கட்சியின் பெயர் மற்றும் கொடியை முடிவு செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது. வருகிற ஆகஸ்டு 15ம் தேதி, அவர் தன்னுடைய புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகம் செய்வார் என செய்திகள் வெளிவந்துள்ளது.
 
ஏற்கனவே அவருக்கு பல நடிகர், நடிகைகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர் கட்சி தொடங்கினால் அதில் இணைய விருப்பம் இருப்பதாக நடிகை மீனா மற்றும் நமீதா ஆகியோர் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
மேலும், தற்போதுள்ள பல்வேறு அரசியல் கட்சிகளிலிருந்து பலர் ரஜினியுடன் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்