அதிமுக- பாஜக வின் நிழல் ரஜினி – ஜெ.அன்பழகன் டுவீட்

Webdunia
செவ்வாய், 12 மே 2020 (15:25 IST)
மதுக்கடைகள் மூட சொல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தமிழகம் மேல்முறையீடு செய்துள்ளதற்கு ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கடந்த 7ம் தேதி தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட சில இடங்களை தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் ஊரடங்கு விதிமுறைகளை சரியாக பின்பற்றவில்லை என இதுகுறித்து புகார்கள் அளிக்கப்பட்டதால் மதுக்கடைகளை மூடும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு மேல்முறையீடு செய்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. மீண்டும் தமிழகம் மேல்முறையீடு செய்திருப்பதற்கு அரசியல் கட்சிகள் பல எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் தமிழக அரசின் இந்த முடிவு குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் “இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள் “ என்று கூறியிருந்தார்.

நீண்ட நாட்களாக அரசியல் குறித்து கருத்துகள் தெரிவிக்காமல் இருந்த ரஜினிகாந்த் தற்போது நேரடியாக அரசை விமர்சித்து பதிவிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில்,  திமுக எம்.எல்.ஏ ஜெ, அன்பழகன் இதுகுறித்து ஒரு டிவீட்டை பதிவுட்டுள்ளார்.

அதில், ரஜினிகாந்த் TASMAC விவகாரம்... “பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது” , அதிமுக- பாஜக வின் நிழல் ரஜினி என்பதை தெரிந்துக் கொள்ளலாம். என பதிவிட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்