ரஜினியின் கட்சியின் பெயர்: அறிவிப்பு எப்போது தெரியுமா?

Webdunia
திங்கள், 1 ஜனவரி 2018 (16:07 IST)
ஒரு வழியாக 20 ஆண்டுகள் பொறுமைக்கு பின்னர் நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்துள்ளார். இதனையடுத்து அவரது கட்சியின் பெயர் குறித்து அறிந்துகொள்ள பலரும் ஆர்வமாக உள்ளனர்.
 
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் காந்திருந்து, காத்திருந்து 20 வருடங்களுக்கு பின்னர் அது நடந்திருக்கிறது. பல்வேறு கால கட்டங்களில் அரசியல் குறித்த கேள்விகளுக்கு மழுப்பலாக பதில் சொல்லிவிட்டு நழுவிய ரஜினிகாந்த் நேற்று தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டார்.
 
தனது ரசிகர்கள் மத்தியில் நேற்று பேசிய ரஜினி, நான் அரசியலுக்கு வருவது உறுதி. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை. வரும் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டி என அறிவித்து அரசியல் களத்தை பற்றவைத்தார்.
 
இதனையடுத்து ரஜினியின் கட்சி பெயர், கொடி பற்றி தெரிந்துகொள்ள அவரது ரசிகர்கள் உள்பட பலரும் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில் ரஜினி தனது கட்சியின் பெயரை வரும் பொங்கல் தினத்தன்று அறிவிக்க வாய்ப்புள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்