இந்த தைரியத்தில்தான் ரஜினி அரசியல் பேசினாரா? பாஜக, திமுக அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 23 ஜூன் 2017 (22:10 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த மாதம் ரசிகர்களிடையே பேசியபோது, 'சிஸ்டம் சரியில்லை என்று மாநில அரசையும்,  மத்திய அரசையும் மறைமுகமாக தாக்கியதோடு, போர் வரும்போது களம் இறங்குவோம்' என்று அரசியலுக்கு வருவது குறித்து வீரமாக பேசினார்.



 


ரஜினி இதுவரை இலைமறை காய்மறையாக மட்டுமே அரசியல் பேசியதற்கும் இப்போது அரசியல் பேசியதற்கும் நிறைய வித்தியாசம் இருந்ததால், அவர் அரசியலுக்கு வரமாட்டார் என்று கூறியவர்கள் கூட இந்தா முறை கண்டிப்பாக வந்துவிடுவார் என்று கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் தமிழகத்தில் எந்த அரசியல் தலைவருக்கு செல்வாக்கு இருக்கின்றது என்பது குறித்தும் தான் அரசியலுக்கு வந்தால் எந்த அளவுக்கு வெற்றி கிடைக்கும் என்பது குறித்தும் பெங்களூரில் உள்ள தனியார் துப்பறியும் நிறுவனம் மூலம் சர்வே எடுத்தாராம் ரஜினி. அந்த சர்வேயில் 50%க்கும் மேல் ரஜினிக்கு ஆதரவு கிடைத்திருப்பது தெரிய வந்ததால் தான் இந்த முறை தைரியமாக களமிறங்குகிறாராம், இந்த உண்மையை லேட்டாக புரிந்து கொண்ட பாஜக மற்றும் திமுக அதிர்ச்சியில் உள்ளன.
அடுத்த கட்டுரையில்