அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கூடிய வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, தமிழகத்தில் உள்ள அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் மக்கள் மீது அக்கறை இல்லை என்றும், இரண்டு கட்சிகளும் சொந்த கட்சியின் நலன்களில் மட்டுமே அக்கறையுடன் உள்ளனர் என்றும் நீதிபதி வேதனையுடன் தெரிவித்தார்.
இதனை அடுத்து, அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கை விரைந்து விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இத்துடன், இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.