ரஜினி ஒரு வெகுளி ; அரசியலுக்கு சரிபட்டு வரமாட்டார் : ராஜேந்திர பாலாஜி அதிரடி

Webdunia
வியாழன், 28 டிசம்பர் 2017 (14:11 IST)
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு சரிபட்டு வரமாட்டார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.

 
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுகு வருவார் என கடந்த 20 வருடங்களாக பலரும் பேசி வருகின்றனர். ஆனால், அவரோ அதுபற்றிய ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார். தற்போது அவர் தனது ரசிகர்களை சந்தித்து பேசியும், அவர்கள் முன் உரையாடியும் வருகிறார். மேலும், வருகிற டிசம்பர் 31ம் தேதி தன்னுடைய அரசியல் நிலைப்பாடு பற்றி அறிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
ஆனால், முதலில் பவுண்டேஷன் ஒன்றை தொடங்கி அதன் மூலம் மக்களுக்கு நல்லது செய்து அதன் மூலம் மக்கள் ஆதரவை முதலில் பெறுவோம் என்ற திட்டத்தில் ரஜினி இருப்பதாக கூறப்படுகிறது. இதைத்தான் ரஜினி 31-ஆம் தேதி அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
 
இந்நிலையில், ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி செய்தியாளர்களிடம் இன்று கருத்து தெரிவித்த அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி “ரஜினிகாந்த் ஒரு வெகுளி. அவரின் குணத்திற்கும், வயதிற்கும் அரசியல் சரிப்பட்டு வராது” என அவர் தெரிவித்தார். 
 
மேலும், 89 எம்.எல்.எ.ஏக்கள் கொண்ட திமுகவே எங்களுக்கு எதிரி இல்லை. தினகரன் எப்படி எதிரி ஆவார்?” எனவும் அவர் கருத்து தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்