ராஜேந்திர பாலாஜி வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு: 3வது நீதிபதிக்கு பரிந்துரை

Webdunia
வியாழன், 4 மார்ச் 2021 (15:06 IST)
தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தது
 
இந்த நிலையில் சற்று முன் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை இரண்டு நீதிபதிகள் அமர்வு அறிவித்தது. ஆனால் இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி உள்ளனர் 
இதனையடுத்து இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு விசாரிக்க குழு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மூன்றாவது நீதிபதிகளை நியமிக்கும் வகையில் ஆவணங்களை தலைமை நீதிபதிக்கு அனுப்ப பரிந்துரை செய்யப்பட்டுள்ளது
 
முன்னதாக ராஜேந்திரபாலாஜி வருமானத்துக்கு அதிகமாக 7 கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்