காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை: பள்ளிகள் விடுமுறை..!

Siva
வெள்ளி, 25 அக்டோபர் 2024 (07:40 IST)
இன்று காலை 10 மணி வரை ஐந்து மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், ஒரே ஒரு மாவட்டத்திற்கு மட்டும் பள்ளிகள் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததின் காரணமாக, சென்னை உள்பட மாநிலம் முழுவதும் பரவலாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. குறிப்பாக, டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்து வருவதுடன், மதுரையில் பெய்த அதிக கன மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில், அதாவது கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே டானா புயல் கரையை கடந்ததால் தமிழகத்திற்கு பெரிய அளவில் மழை இல்லை என்றாலும், பருவமழை காரணமாக மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று ஒரு நாள் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் அழகுமீனா அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற மாவட்டங்களில் வழக்கம் போல் இன்று பள்ளிகள் இயங்கி வருகின்றன.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்