ஆன்லைன் மூலம் பார்சல் கட்டணம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 1 மே 2020 (16:24 IST)
ஆன்லைன் மூலம் பார்சல் கட்டணம்
இதுவரை இரயிலில் மூலமாக அனுப்பப்படும் பார்சல் கட்டணங்களை நேரில் சென்று செலுத்தும் வகையில் இருந்த நிலையில் தற்போது ஆன்லைன் மூலமாகவும் பார்சல் கட்டணம் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் கூறியபோது ஊரடங்கு மற்றும் சமூக இடைவெளி காரணங்களால் இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த எளிய முறையில் வீட்டில் இருந்தோ அல்லது அலுவலகத்தில் இருந்து பொதுமக்கள் தாங்கள் அனுப்பும் பார்சல் சேவை கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
பொதுமக்கள் அனுப்பும் பார்சலை ஏற்றிச் செல்ல அனுமதி பெற்றதும் அதற்கான கட்டண தொகையை வங்கிகள் மூலமோ அல்லது பிற செயல்களின் மூலமோ செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் கட்டணத்தொகை ரயில்வே நிர்வாகத்திற்கு செலுத்தியது உறுதி செய்யப்பட்டவுடன் வாடிக்கையாளர்களின் பார்சல்கள் கொண்டு செல்ல வேண்டிய இடத்திற்கு சேர்க்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது
 
இந்த புதிய வசதியால் வாடிக்கையாளர்களுக்கு வேலைப்பளு குறைகிறது என்பது குறிப்பிடதக்கது. இது குறித்து மேலும் விபரம் அறிய விரும்புவோர் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் அணுகலாம் என்றும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. 
 
தொலைபேசி எண்கள்:9444282223, 8129316480, 9444385240
 
இமெயில்: srdcm@mas.railnet.gov.in
 
வலைதள முகவரி: www.srcommercialmas.com
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்