நாளைக்கு தண்டவாளம் பக்கம் போய்டாதீங்க..! – திருத்துறைப்பூண்டி மக்களுக்கு எச்சரிக்கை!

Webdunia
வெள்ளி, 21 அக்டோபர் 2022 (12:29 IST)
நாளை திருத்துறைப்பூண்டி முதல் அகஸ்தியம்பள்ளி வரை உள்ள மக்கள் ரயில் தண்டவாளம் பக்கம் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் ஒருகாலத்தில் மீட்டர்கேஜ் ரயில் தண்டவாளங்கள் இருந்து வந்தது. பின்னர் அவை அகல ரயில்பாதைகளாக மாற்றப்பட்டன. ஆனால் சில பகுதிகளில் மட்டும் இன்னமும் மீட்டர்கேஜ் லைன்கள் இருந்து வருகின்றன.

அப்படியான பகுதிகளில் திருத்துறைப்பூண்டியும் ஒன்று. சமீபத்தில் ரூ.288 கோடியில் மீட்டர்கேஜ் இணைப்புகளை அகலரயில் பாதைகளாக மாற்றும் பணி தொடங்கப்பட்டது. அகஸ்தியம்பள்ளி முதல் திருத்துறைப்பூண்டி வரை 37 கி.மீ தூரத்திற்கு அகலபாதை தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது.

ALSO READ: சந்திரயான்-3 விண்கலம் செலுத்தப்படுவது எப்போது? இஸ்ரோ இயக்குநர் தகவல்..!

இந்த பணிகள் முழுவதுமாக முடிவடைந்துள்ள நிலையில் அகஸ்தியம்பள்ளி – திருத்துறைப்பூண்டி இடையே அதிவேக ரயில் சோதனை ஓட்டத்தை நடத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது. அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதால் அப்பகுதி மக்கள் யாடும் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை ரயில் பாதை அருகே செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Edited By: Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்