ஒரு தங்க மான்குட்டியைத் தண்டவாளத்தில் தள்ளினான் ஒரு பேய்மகன்- வைரமுத்து டுவீட்

செவ்வாய், 18 அக்டோபர் 2022 (16:15 IST)
பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யா என்பவரை காதலித்து வந்த சதீஷ் என்பவர் ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் குறித்து கவிஞர் வைரமுத்து டுவீட் பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில்,  சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யா என்பவரை காதலித்து வந்த சதீஷ் என்பவர் ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்தார்.

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு விடிய விடிய விசாரணை செய்யப்பட்டதில் காதல் தோல்வி காரணமாக அவர் ஆத்திரத்தில் கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்ததாக செய்திகள் வெளியானது. இதையடுத்து, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டார் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு.


ALSO READ: கல்லூரி மாணவி சத்யா படுகொலை: கைதான சதீஷ்-க்கு அக்டோபர் 28 வரை நீதிமன்ற காவல்
 
தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த சம்பவம் பற்றிய  பிரபல பாடலாசிரியர் வைரமுத்து தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில், தனக்குக் கிடைக்காதது
யாருக்கும் கிடைக்கக்கூடாதென
ஒரு தங்க மான்குட்டியைத்
தண்டவாளத்தில்
தள்ளினான் ஒரு பேய்மகன்

தனக்குக் கிடைக்காததெல்லாம்
யாருக்கும் கிடைக்கக்கூடாதென
மனிதகுலம் நினைத்திருந்தால்
இந்த பூமி
ஒரு மண்டையோடு போலவே
சுற்றிக்கொண்டிருந்திருக்கும்

கிட்டாதாயின்
வெட்டென மற என இளைஞர்களுக்கு அறிவுறுத்துவதாக  தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj
 

தனக்குக் கிடைக்காதது
யாருக்கும் கிடைக்கக்கூடாதென
ஒரு தங்க மான்குட்டியைத்
தண்டவாளத்தில்
தள்ளினான் ஒரு பேய்மகன்

தனக்குக் கிடைக்காததெல்லாம்
யாருக்கும் கிடைக்கக்கூடாதென
மனிதகுலம் நினைத்திருந்தால்
இந்த பூமி
ஒரு மண்டையோடு போலவே
சுற்றிக்கொண்டிருந்திருக்கும்

கிட்டாதாயின்
வெட்டென மற

— வைரமுத்து (@Vairamuthu) October 18, 2022

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்