வெற்றியை கொண்டாடும் நேரமிது ; போராட்டத்தை கை விடுங்கள் : ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்

Webdunia
திங்கள், 23 ஜனவரி 2017 (13:10 IST)
ஜல்லிக்கட்டு தொடர்பாக நாம் நடத்திய போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. எனவே போராட்டத்தை கை விடுங்கள் என நடிகர் ராகவா லாரன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


 

 
ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்ததையடுத்து, சென்னை மெரினா கடற்கரையில், கடந்த ஒரு வார காலமாக போராட்டம் நடந்தி வந்தர்களை கலைந்து செல்லுமாறு இன்று காலை போலீசார் வலியுறுத்தினார்கள்.  ஆனால், சிலர் அதை ஏற்க மறுத்து, கடலில் அருகில் சென்று மனித சங்கிலி அமைத்து அங்கிருந்து செல்லமாட்டோம் என கூறி வருகின்றனர். ஒரு கட்டத்திற்கு மேல் போலீசார் தடியடியும் நடத்தினார்கள். இதனால் மெரினா கடற்கறை போர்க்களமானது.
 
இந்நிலையில், மாணவர்கள் யாரும் கடலுக்குள் சென்று போராட்டம் நடத்த வேண்டாம் என அவர் ஏற்கனவே ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் அவர் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
 
அதில், தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தை ஆளுநர் ஏற்றுக்கொண்டுள்ளார். மேலும், இது நிரந்தர சட்டம்தான் என அவர் உறுதி மொழி அளித்துள்ளார். எனவே, நமக்கு வெற்றி கிடைத்துள்ளது. எனவே போராட்டத்தை கை விடுங்கள். நாம் போராட்டம் நடத்திய இடத்தில் இன்று இரவு நாம் அதைக் கொண்டாட வேண்டும். எனவே, கடலுக்கு அருகில் நிற்கும் இளைஞர்கள் அங்கிருந்து வெளியேறுங்கள். இன்னும் ஒரு மணி நேரத்தில் நான் அங்கு வந்து உங்களுக்கு விளக்கிச் சொல்கிறேன். அதுவரை பொறுமையாக அமருங்கள்” என கோரிக்கை விடுத்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்