ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் அறிவிப்பு!

Webdunia
புதன், 15 மார்ச் 2017 (11:17 IST)
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் திமுக வேட்பாளராக என்.எம்.மருதுகணேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். இதை அக்கட்சியின் பொதுசெயலாளர் அன்பழகன்  அறிக்கையாக  வெளியிட்டுள்ளார்.


 
 
வழக்கறிஞரான மருது கணேஷ் ஆர்.கே.நகரில் பகுதி செயலாளராக இருக்கிறார். இவர் இதற்கு முன்னர் வேறு எந்த தேர்தலிலும் போட்டியிட்டதில்லை.
 
திமுக சார்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட சிம்லா முத்துசோழன் போட்டியிடப்போவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது என்.எம்.மருதுகணேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதிமுகவின் சார்பில் டி.டி.வி தினகரன் போட்டியிட உள்ளதாக இன்று அறிவிப்பு வெளியானது. இதனால் அவருக்கு எதிராக என்.எம் மருதுகனேஷ் களம்  இறக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதையடுத்து, கருத்து தெரிவித்துள்ள திமுக தரப்பு,  அடுத்தகட்ட நடவடிக்கையாக தேர்தல் பிரசாரம் போன்றவை நடைப்பெறும்.  முக்கியமாக, மக்கள் பிரச்சனைகளை முன்  வைத்து தேர்தல் பிரசாரம் நடைப்பெறும் எனவும் தெரிவித்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்