ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரனுடன் மோதும் திமுக வேட்பாளர் அறிவிப்பு

Webdunia
புதன், 15 மார்ச் 2017 (11:13 IST)
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், அவர் கடந்த டிசம்பர் மாதம் 5ஆம் தேதி உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார்.


 

அவரது மறைவையடுத்து ஆர்.கே.நகர் தொகுதி காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகின்ற ஏப்ரல் 12அம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனால், ஆர்.கே.நகர் தொகுதியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஏற்பட்டது. ஏற்கனவே அறிவித்தபடி ஆர்.கே.நகர் தொகுதியில் தீபா போட்டியிடுவேன் என அறிவித்துள்ளார். ஓ.பி.எஸ். அணி தரப்பில் யார் போட்டியிடுவார் என தெரியவில்லை.

இந்நிலையில், சசிகலா அணி சார்பில், அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினரன் போட்டியிடுவார் என இன்று அறிவிக்கப்பட்டது. அதேபோல் பிரதான எதிர்கட்சியாக உள்ள திமுக தரப்பில் என்.மருதுகணேஷ் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்