புதுச்சேரியில் நாராயணசாமி அரசு கவிழ்ந்தது! – சபாநாயகர் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 22 பிப்ரவரி 2021 (11:36 IST)
புதுச்சேரி சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்க தவறியதால் நாராயணசாமியின் ஆட்சி கவிழ்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் ஆட்சி செய்து வரும் காங்கிரஸின் எம்.எல்.ஏக்கள் 5 பேரும், திமுக எம்.எல்.ஏ ஒருவரும் பதவியை ராஜினாமா செய்த நிலையில் ஆளும் காங்கிரஸ் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுனர் தமிழிசை சௌந்தர்ராஜன் உத்தரவிட்டார்.

அதை தொடர்ந்து இன்று நடைபெற்ற பேரவை கூட்டத்தில் முதல்வர் நாராயணசாமி பேசிய நிலையில் அவர் பெரும்பான்மையை நிரூபிக்க தவறியதால் நாராயணசாமி அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் அறிவித்தார். அதை தொடர்ந்து நாராயணசாமி பேரவையை விட்டு வெளியேறினார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்