இதனை அடுத்து அவர் வீட்டுக்கு வந்த நிலையில் அவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு முதல் பரிசு ஆன 20 கோடி ரூபாய் விழுந்திருப்பதாக தகவல் வெளியானது. இதனை அடுத்து அவர் இன்ப அதிர்ச்சியடைந்து உடனடியாக லாட்டரி சீட்டு கடையை தொடர்பு கொண்டு தனக்கு பரிசு விழுந்ததை உறுதி செய்துள்ளதை அடுத்து அவர் நேரில் சென்று பரிசை பெறுவதற்காக சென்றார்
அப்போது அவரை பேட்டி எடுக்க பத்திரிகையாளர்கள் குவிந்த நிலையில் தன்னுடைய பெயர் மற்றும் புகைப்படத்தை வெளியிட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொண்டு தான் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் இந்த பணத்தை வைத்து குடும்பத்தினருக்கு தேவையானதை வாங்கி கொடுப்பேன் என்றும் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வேன் என்றும் கூறியுள்ளார்