புதுமனை புகுவிழாவிற்கு தயாராக இருந்த 2 மாடி வீடு விழுந்து தரைமட்டம்: கதறியழுத வீட்டின் உரிமையாளர்கள்..!

Mahendran

திங்கள், 22 ஜனவரி 2024 (16:35 IST)
புதுமனை புகு விழாவிற்கு தயாராக இருந்த இரண்டு மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமான  சம்பவம் வீட்டின் உரிமையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை அடுத்து வீட்டின் உரிமையாளர்கள் இடிந்த கட்டடத்தை பார்த்து கதறி அழுத காட்சி கண்ணீரை வரவழைப்பதாக இருந்தது. 
 
புதுச்சேரியில் உப்பனாறு கால்வாய் அருகே இரண்டு மாடி கட்டிடம் ஒன்று சமீபத்தில் கட்டப்பட்டது. தான் சேர்த்து வைத்திருந்த லட்சக்கணக்கான ரூபாய் மற்றும் கடன் வாங்கி இந்த வீட்டை அந்த வீட்டின் உரிமையாளர்கள் கட்டியதாக தெரிகிறது. 
 
வரும் பிப்ரவரி 1ஆம் தேதி புதுமனை புகுவிழா நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் திடீரென கால்வாயில்  அதிக தண்ணீர் வந்ததை அடுத்து இந்த வீடு திடீரென ஆட்டம் கண்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வீட்டின் உரிமையாளரிடம் போய் சொன்ன போது வீட்டில் உரிமையாளர்கள் வந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த வீடு தரைமட்டமாகியது. இதை பார்த்து வீட்டின் உரிமையாளர்கள் கதறி அழுத காட்சி காண்போரை கண்ணீரை வரவழைக்கும் வகையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்