புதுச்சேரி தலைமைச் செயலாளர் மாற்றம்.! மாவட்ட ஆட்சியரும் அதிரடியாக மாற்றம்.!!

Senthil Velan

திங்கள், 29 ஜனவரி 2024 (17:07 IST)
புதுச்சேரி தலைமை செயலாளராக இருந்த ராஜுவ் வர்மா சண்டிகருக்கு அதிரடியாக இடம் மாற்றப்பட்டுள்ளார்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் தலைமைச் செயலாளராக ராஜீவ் வர்மா பணியாற்றி வந்தார். இந்நிலையில் ராஜீவ் வர்மா சண்டிகருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 
 
இதனையடுத்து அருணாச்சலப் பிரதேசத்தில் பணியாற்றும் சரத் சவுகான் புதுச்சேரியின் புதிய தலைமைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் வல்லவனும் கோவாவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ALSO READ: ஊழல் - நிர்வாகத் திறமையின்மை.. ஏழைகளுக்கு வீடுகள் இல்லை.! ஆளுநர் ஆர்.என் ரவி.!!
 
ஏற்கனவே அரசின் கோப்புகளை தலைமைச் செயலர் தாமதப்படுத்துவதாக புகார் தெரிவித்து இருந்த நிலையில் தற்போது தலைமைச் செயலராக இருந்த ராஜு வர்மா அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்