மே 4 பேருந்துகள் இயங்குமா? போக்கு காட்டும் சென்னை போக்குவரத்து!!

Webdunia
புதன், 22 ஏப்ரல் 2020 (14:22 IST)
மே 4 முதல் சென்னையில் போக்குவரத்து சேவைகள் தொடங்கப்படுகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் இரண்டாவது கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. மே 3 உடன் இந்த ஊரடங்கு முடிய உள்ள நிலையில், சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 
 
அதில் மே 4 முதல் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கப்பட்டுள்ளன. அவை, பின்வருமாறு... 
 
1. ஊழியர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து பணிக்கு வரவேண்டும்.
2. ஊழியர்கள் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை கைகளைக் கழுவ வேண்டும். 
3. காய்ச்சல் உள்ளிட்ட கரோனா அறிகுறிகள் இருந்தால் விடுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். 
4. பணியிடத்தில் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். 
5. பயணிகள் முகக் கவசம் அணியாமல் இருந்தால் அவர்களை பேருந்தில் ஏற அனுமதிக்கக் கூடாது. 
 
இதனால் மே 4 முதல் சென்னையில் போக்குவரத்து சேவைகள் தொடங்கப்படுகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், இந்த சுற்றறிக்கை மூலம் மே 4 ஆம் தேதி பேருந்துகள் இயக்கப்படும் என்பது அர்த்தமல்ல, ஊழியர்களுக்கான அறிவுறுத்தல்தான். பேருந்துகளை இயக்கலாம் என்று அரசு அறிவித்த பின்னர்தான் இயக்கப்படும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்