பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டம் ரத்து! – உயர்நீதிமன்றம் உத்தரவு!

Webdunia
திங்கள், 25 ஏப்ரல் 2022 (12:54 IST)
பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தமிழகத்தில் பிரபல யூட்யூபராக வலம் வந்தவர் பப்ஜி மதன். தனது யூட்யூப் சேனல்களில் கேம் வீடியோக்களை பதிவேற்றி வந்த பப்ஜி மதன் அதிகமாக பப்ஜி விளையாட்டு குறித்த வீடியோக்களை அப்லோட் செய்ததால் பப்ஜி மதன் என அழைக்கப்படுகிறார்.

வெறுமனே வீடியோ மட்டும் செய்யாமல் அதில் பெண்கள் குறித்து ஆபாசமாகவும், தரகுறைவாகவும் பேசுதல், பண மோசடி என பல குற்ற செயல்களில் ஈடுபட்டதாக அவர் மீது கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் மதனை போலீஸார் கைது செய்தனர்.

பப்ஜி மதன் மீது குண்டாஸ் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் மதன் மீதான ஜாமீன் மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் இன்று பப்ஜி மதன் அளித்திருந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையின் பிறகு நீதிபதிகள் மதன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்துள்ளனர்.

குண்டர் சட்டம் தவிர தொடுக்கப்பட்டுள்ளது பிற வழக்குகளின் படி விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்