பப்ஜி மதன் ஆபாசமாக பேசி சம்பாதித்த பணம், ஆடி கார் பறிமுதல்!

Webdunia
வெள்ளி, 18 ஜூன் 2021 (12:31 IST)
பப்ஜி மதன் ஆபாசமாக பேசி சம்பாதித்த பணத்தில் வாங்கிய 2 ஆடி கார்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 

 
ஆன்லைன் விளையாட்டுகளை யூட்யூபில் ஒளிபரப்புவது மற்றும் யூட்யூப் சேனலில் பல வீடியோக்களை வெளியிடுவது என யூட்யூப் பிரபலமாக இருப்பவர் மதன். தனது யூட்யூப் சேனலிலும், ஆன்லைன் விளையாட்டின்போது மதன் தொடர்ந்து பெண்களை கொச்சையான வார்த்தைகளால் பேசுவது சர்ச்சையை ஏற்படுத்தியது.
 
இதுகுறித்து விசாரணைக்கு மதனை போலீசார் அழைத்த நிலையில் அவர் தலைமறைவானார். இதனால் அவரது மனைவி கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டார். இந்நிலையில் மதனின் சொகுசு கார் மற்றும் சொத்துக்களை முடக்கியதுடன், மதனை தேடும் பணியையும் போலீஸார் முடுக்கிவிட்டிருந்தனர். இந்நிலையில் தருமபுரியில் தலைமறைவாக இருந்த மதனை போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
இந்நிலையில், பப்ஜி மதன் ஆபாசமாக பேசி சம்பாதித்த பணத்தில் வாங்கிய 2 ஆடி கார்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மனைவி கிருத்திகா வங்கிக்கணக்கில் ரூ.4 கோடி இருப்பதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்