தேமுதிக தலைவரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை: பிரேமலதா

Webdunia
ஞாயிறு, 1 ஜனவரி 2023 (16:49 IST)
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை பொருத்தவரை தலைவரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என்றும் கேப்டன் விஜயகாந்த் மட்டுமே தலைவர் என்றும் பிரேமலதா தெரிவித்துள்ளார். 
 
இன்று கேப்டன் விஜயகாந்த் தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு வந்து தொண்டர்களை சந்தித்த நிலையில் அதன் பிறகு பிரேமலதா செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். இதனை அடுத்து பிரேமலதா தேமுதிகவின் தலைவராக போவதாக செய்திகள் வெளியானது குறித்த கேள்விக்கு அவர் பதில் அளித்தபோது தேமுதிகவை பொறுத்தவரை எப்போதும் கேப்டன் தான் தலைவர் என்றும் அவரை தவிர வேறு தலைவரை நியமிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்தார் 
 
மேலும் தேமுதிகவின் உள்கட்சி தேர்தல் நடைபெற்று வருவதாகவும் யார் யாருக்கு என்ன பதவி கொடுக்கப் படும் என்பதை தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தகுந்த நேரத்தில் அறிவிப்பார் என்றும் அவர் தெரிவித்தார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்