தூய்மை பணியாளர்களை முதன்மை பணியாளர் என்று அரசு ஆணையிட வேண்டும் -விஜயகாந்த்

வியாழன், 29 டிசம்பர் 2022 (17:44 IST)
அனைத்து மாநகராட்சிகளிலும் பணிபுரியும் தற்காலிக மற்றும் தினக்கூலி பணியாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக அரசை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், நகராட்சி நிர்வாகத்துறை பிறப்பித்துள்ள அரசாணை எண் 152 காரணமாக தமிழகத்தில் உள்ள 20 மாநகராட்சிகளிலும் 20 வகை பணியிடங்கள் நீக்கப்பட்டுள்ளன.

இந்த அரசாணை அரசாணை அமல்படுத்தப்பட்டால் மக்களுக்கான அன்றாட சேவைகளான குடிநீர் விநியோகம், திடக்கழிவு மேலாண்மை, வரி வசூல் உள்ளிட்ட பெரும்பாலான பணிகள் பாதிக்கப்படும்.

மேலும் இப்பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் வாழ்வாதாரமும் கேள்வி குறியாகிவிடும். எனவே அரசாணை 152ஐ ரத்து செய்திட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநகராட்சியில் குழு பணியாளர்கள் பணி செய்யும் போது விபத்து மற்றும் உயிரிழப்பு ஏற்பட்டால் இழப்பீடு தொகை மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

மாநகராட்சி பெண் பணியாளர்களுக்கு மகப்பேறு காலங்களில் குறைந்தது 6 மாத சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும்.

அனைத்து மாநகராட்சிகளிலும் பணிபுரியும் தற்காலிக மற்றும் தினக்கூலி பணியாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக
அரசை கேட்டுக் கொள்கிறேன்.

கடைநிலை ஊழியர்களான தூய்மை பணியாளர்களை முதன்மை பணியாளர் என்று அரசு ஆணையிட வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்