அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையனின் விலை உயர்ந்த செல்போன் திருடு போனது.
பொன்னையன் சென்னை அண்ணா நகரில் வசித்துவருகிறார். இன்று காலை அவரது வீட்டின் அருகே உள்ள உணவகம் ஒன்றில் தேனீர் அருந்துவதற்காக சென்றார். அப்போது டேபிளில் தனது விலை உயர்ந்த செல்போனை வைத்துவிட்டு தேனீர் குடித்துள்ளார். பின்னர் டேபிளில் பார்த்தபோது தனது செல்போன் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.