ராம்குமார் பெற்றோரிடம் போலீஸார் விசாரணை

Webdunia
சனி, 2 ஜூலை 2016 (11:37 IST)
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதியை கொலை செய்த ராம்குமாரை காவல் துறையினர் இன்று அதிகாலை நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் கைது செய்தனர்.


 

சூளைமேட்டை சேர்ந்த ஒரு மேன்சனில் தங்கி இருந்த ராம்குமார் நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள மீனாட்சி புரம் பகுதியை சார்ந்தவர். இன்று அதிகாலை காவல் துறையினர் ராம்குமாரை கைது செய்ய முயன்றபோது, அவர் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

உடனடியாக குற்றவாளியை கைது செய்த காவலர்கள் செங்கோட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து, பின்னர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு அறுவைசிகிச்சை செய்த மருத்துவர்கள் ராம்குமார் அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் ராம்குமார் பெற்றோர்,தங்கை மற்றும் தம்பி ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இதற்காக இவர்கள் நெல்லை அழைத்துவரப்பட்டனர்.
அடுத்த கட்டுரையில்